Sunday, 26 June 2011

வேதாரண்யம் விபத்தில் 12 குழந்தைகளைக் காத்து உயிர் நீத்த ஆசிரியைக்கு அண்ணா பதக்கம்

Teacher Suganthi
வேதாரண்யம் அருகே கோவில் குளத்தில் பள்ளி வேன் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில் தன்னுயிரைக் கொடுத்து 12 குழந்தைகளின் உயிர் காத்த ஆசிரியை சுகந்திக்கும், தேனியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் அண்ணா பதக்கம் அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு ஆண்டுதோறும் வீர, தீர செயல்களில் ஈடுபட்டு, உயிர்களையும், அரசு சொத்துக்களையும் பாதுகாத்த பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் அண்ணாவின் பெயரில் பதக்கம் வழங்கி சிறப்பித்து வருகிறது.

இவ்விருது பெறுபவருக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க மூலாம் பூசிய பதக்கமும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கத்தினை முதல்வர் கருணாநிதி 26-ந் தேதி குடியரசு தினவிழாவின் போது வழங்குவார். இந்த ஆண்டிற்கான அண்ணா பதக்கம் இருவருக்கு வழங்கப்படுகிறது.

கடந்த 3.12.2009 அன்று, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம் கத்திரிபுலம் கிராமம் காமாட்சியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் கரியாப்பட்டினம் கலைவாணி மகா மெட்ரிக் பள்ளியின் வேன், நிலை தடுமாறி, சாலை ஓரத்தில் இருந்த ஆழமான குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.

இந்த பள்ளி வாகனத்தில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 21 பள்ளிக் குழந்தைகளும், எம்.சுகந்தி என்ற ஆசிரியையும் இருந்தனர். அப்போது பள்ளிக் குழந்தைகளை, தனக்கு நீச்சல் தெரியாதபோதும், காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு 12 குழந்தைகளை காப்பாற்றி, தண்ணீருக்குள் மூழ்கி ஆசிரியை சுகந்தி இறந்துவிட்டார். தன்னுயிரையும் பொருட்படுத்தாது பிற உயிர்களை காத்த ஆசிரியர் சுகந்திக்கு அண்ணா பதக்கம் வழங்க பட்டது , அதை சுகந்தி தகப்பனார் வாங்கினார்.

Tuesday, 21 June 2011

கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்:

கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்:

கோடியக்காடு வேதாரண்யத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி.மீ அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக்காடு இருமருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர்மண் இருக்கிறது. மழை குறைவாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை, கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழிதுவரை என்ற கொட்டையும் பூனைக்காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன.

இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும், குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில் இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில் பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.

இங்குள்ள காடுகளில் (type one para) ஒருவகைப்பறவை (Flamingo) கோடியக்கரைக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டுதோறும் வந்து செல்கிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் கொண்டது. நான்கடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்ற வளைந்த கழத்து, ஆரஅமர உண்ணும் தன்மை, ஒற்றைக்காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல் இத்தகைய இயல்புகள் நிறைந்தது. கோடியக்கரையில் கடலோரத்திலுள்ள நண்டு இனங்களில் சாறைக் குடிக்கவே இவை இங்கு வருகின்றன.

திருமரைக்காடு

வேதாரண்யம்:

வடமொழியில் மாற்றபெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். வேதாரண்யம், நாகையிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது சிவன் மணவாளசுவாமியாக அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பது ஐதீகம். திருநாவுக்கரசர் 11 பாடல்கள் பாடி இக்கோயிலின் கதவை திறந்ததும்; ஞானசம்பந்தர் பாடிய பாட்டால் மூடிக்கொண்டதாகக் கூறி இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் பூட்டும் திருவிழா மாசிமாதத்தில் நடைபெறுகிறது.

யாழ்ப்பாணத்தார் இக்கோயிலுக்கு நிறைய திருப்பணி செய்திருக்கிறார்கள் இக்கோயிலில் சரசுவதி கையில் வீணையின்றி ஏடுமட்டும் இருப்பது, நவக்கிரகங்கள் கிழமை வரிசைப்படி ஒரே நேர்கோட்டு வரிசையில் அடுத்தடுத்து இருப்பது, சோழர் வரலாற்றைக் கூறும் 84 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.

இங்கு காண வேண்டியவை:

மரகத புவினி விடங்கர், இராமர் வழிபட்டலிங்கம், கதோபநிஷத்தை இயற்றிய நசிகேதர் தவம் செய்த இடம், விசுவாமித்திர தீர்த்தம், தேர் முதலியவை.

1930-ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் ராஜாஜி 'உப்பு சத்தியாகிரகம்' செய்த இடமானதால் இந்தியா முழுவதும் இந்த ஊரைப்பற்றி செய்தி பரவியது. மீன், உப்பு, மிளகாய், காய்கறிகள், கவுதாரி, மாம்பழம் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகிறது.

அகத்தியாம் பள்ளி:

இவ்வூர் வேதாரண்யத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவிலுள்ள கடற்கரையூர். இங்குதான் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதற்கான நினைவுத்தூன் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு அகத்தியருக்கு ஒரு கோவில் உண்டு.

கோடியக்கரை:

Kodikaraiவேதாரண்யத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ளது. தாலமி என்ற வெளிநாட்டு ஆசிரியர் இவ்வூரை தம் படைப்பில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்காரர்கள் இவ்வூரை (றிஷீவீஸீ சிணீறீவீனீஷீக்ஷீமீ) பாயின்ட் காலிமோர் என்று பெயரிட்டனர்.

வடக்கே இருந்து தெற்கு நோக்கிச் செங்குத்தாக வந்து கொண்டிருக்கும் நமது கடற்கரை இந்த முனையில் நேர் கோணமாக மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. கோடிக்கரையில் காலையில் கீழைக்கடலில் கதிரவன் தோன்றுவதையும், மாலையில் தெற்குக் கடலில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். இதுபோன்ற காட்சியை கன்னியாகுமரியில் மட்டும்தான் பார்க்கலாம். கடற்கரையில் நீராட, ஆடி, தை அமாவாசைகளில் மக்கள் பெருங்கூட்டமாக வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அர்த்தோத்திரய விழாவன்று கடலில் நீராடுவது சிறப்பாகக் கருதத்தக்கது.

June 22, 2011


தியாகி வைரப்பனைத் தெரியுமா உங்களுக்கு?

தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புக்கு பெயர் பெற்ற வேதாரண்யத்தில் 1930ல் நடந்த சம்பவம் இது. அப்போது சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. பொதுமக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயர்களையும் அவர்களது எடுபிடிகளையும் புறக்கணித்து வந்த நேரம் அது. 1930ம் ஆண்டு ராஜாஜி தலைமையில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. உப்பு காய்ச்ச தடைவிதித்த ஆங்கிலேயே அரசுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் உதவிகள் எதுவும் செய்வதில்லை என்று மக்கள் தாங்களுக்குள்ளாகவே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டனர்.
அப்படிப்பட்ட சூழலில் ஒருநாள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கே.வைரப்பன் என்ற முடி திருத்துபவரிடம் முடி திருத்த வந்தார். கே.வைரப்பன் ஆங்கிலேயர்களுக்கும், அவர்களது பணியாளர்களுக்கும் முடி திருத்துவதில்லை என்று உறுதி பூண்டிருந்தார். முடி திருத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது. பேச்சுவாக்கில் அவர் ஒரு கான்ஸ்டபிள் என்ற உண்மை, 24 வயதான வைரப்பனுக்குத் தெரிந்தது. பாதி சவரம் செய்த நிலையில் அந்தக் கான்ஸ்டபிளுக்கு சவரம் செய்ய மறுத்து விட்டார். கான்ஸ்டபிள் அச்சுறுத்தியபோதும் வைரப்பனின் தேசபக்தி அசையவில்லை. இதனால் வைரப்பன் கைது செய்யப்பட்டு, 1930ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணை செய்த நீதிபதி வைரப்பனிடம் அந்த போலீஸ்காரருக்கு முழுச்சவரமும் செய்துவிட்டால் மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுவித்து விடுவதாகக் கூறினார். நீதிபதியின் இந்த கூற்றை உறுதியாக மறுத்த வைரப்பன் " உங்களுக்கு மனிதாபிமானம் இருந்தால், இதோ இருக்கிறது கத்தியும் பெட்டியும் நீங்கள் வேண்டுமானால் அவருக்கு சவரம் செய்யுங்கள்" என்று பதிலடி கொடுத்தார். இதைக் கேட்ட நீதிபதி ஆத்திரமடைந்து வைரப்பனுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதித்தார். வேலூர், திருச்சி சிறைகளில் இந்த தண்டனையை அவர் அனுபவித்தார். 1906, மே 22ல் பிறந்த வைரப்பன் தனது 90வயதில் 1997 ஆகஸ்டு 15ம் தேதி நாடு தனது சுதந்திர தின பொன்விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில் மறைந்தார். இப்படிப்பட்ட தியாகி வைரப்பனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், காந்திமதி என்ற மகளும், சண்முகசுந்தரம், பார்தீபன் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இவரது நினைவாக வேதாரண்யம் - நாகப்பட்டினம் சாலையில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரனின் முயற்சியால் அமைக்கப்பட்ட இந்த நினைவு ஸ்தூபியை 1998ல் ஜி.கே.மூப்பனார் திறந்து வைத்தார்.இப்படிப்பட்ட ஒரு தேசபக்தரின் நூற்றாண்டு விழா பி.வி.ராஜேந்திரன் தலைமையில் கொண்டாப்பட்டுள்ளது. தியாகி வைரப்பன் நினைவு ஸ்தூபியிலிருந்து உப்பு சத்தியாகிரக கட்டிடம் வரை பி.வி.ராஜேந்திரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக கட்டிடத்தில் நடந்த நூற்றாண்டு விழாவில் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுல நிர்வாகி வேதரத்தினம் போன்றவர்கள் கலந்துகொண்டு தியாகி வைரப்பனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். இந்த விழாவில் தியாகி வைரப்பனின் மனைவி மற்றும் மகன்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
காந்தியும் நேருவும் மட்டுமே தேசபக்தர்கள், தியாகிகள் என்று எழுதியும் பேசியும் கொண்டிருக்கும் அறிவு ஜீவிகளுக்காக இந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தியாகி வைரப்பனுக்கு 1998ல் நினைவுச் சின்னம் அமைத்ததோடு அவரது நூற்றாண்டை நினைவில் வைத்து கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

நன்றி புதுவை சரவணன்

Monday, 20 June 2011

வேதாரண்யம்

                          வேதாரண்யம் சார்ந்த தகவல்கள்

                                              

வேதாரண்யம் (4) அச்சிடுக மின்னஞ்சல்
Administrator ஆல் எழுதப்பட்டது   
திங்கட்கிழமை, 04 ஏப்ரல் 2011 01:39
அரசியல் கட்சி வேட்பாளர்களின் ப்பீடு அட்டவணை

வேதாரண்யம் தொகுதி
பெயர்
வயது
பாலினம்
கட்சி
குற்ற வழக்குகள்
குற்ற வழக்குகளின் எண்ணிக்கை
கடுமையான இபிகோ வழக்குகள்
இபிகோ வழக்குகளின் விபரம்
கல்வி தகுதி
அசையும் சொத்து
அசையா சொத்து
மொத்த சொத்து
மொத்த கடன்
சின்னதுரை R
61
PMK
இல்லை
0
0

முதுகலை பட்டதாரி
1,32,000
~ 1 Lacs+
15,00,000
~ 15 Lacs+
16,32,000
~ 16 Lacs+
7,00,000
~ 7 Lacs+
கார்த்திகேயன் S.
49
பாஜக
இல்லை
0
0

முதுகலை பட்டதாரி
14,46,000
~ 14 Lacs+
14,00,000
~ 14 Lacs+
28,46,000
~ 28 Lacs+
0
~
N.V. காமராஜ்
48
அஇஅதிமுக
ஆம்
1
0
etc*.
10-ம் வகுப்பு தேர்ச்சி
31,01,439
~ 31 Lacs+
80,10,800
~ 80 Lacs+
1,11,12,239
~ 1 Cror+
3,50,254
~ 3 Lacs+
சனிக்கிழமை, 09 ஏப்ரல் 2011 06:58 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது